தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலக்கடலை கொள்முதல் செய்ய குஜராத் சென்ற தமிழ்நாட்டு வணிகர்கள்!

காந்திநகர்: பாவ்நகர், சவுராஷ்டிராவில் நிலக்கடலை சாகுபடி அதிகம் உள்ளதால் தென்னிந்தியாவிலிருந்து அதிக வணிகர்கள் அங்கு சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டு வணிகர்கள்
Tamil Nadu traders

By

Published : Dec 8, 2020, 6:35 AM IST

குஜராத் மாநிலம் பாவ்நகர், சவுராஷ்டிராவில் நிலக்கடலை அதிகளவில் வணிகம் செய்யப்பட்டுவருகிறது. தென்னிந்தியாவிலிருந்து பல வணிகர்களும் நிலக்கடலை வாங்க அங்கே செல்கின்றனர்.

தமிழ்நாடு வர்த்தகர்கள் நிலக்கடலை வாங்க சவுராஷ்டிராவுக்குச் செல்ல காரணம், நிலக்கடலை இங்கு அதிகம் பயிரிடப்படுவதால். இதனைக் கொள்முதல்செய்ய மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் சவுராஷ்டிராவுக்கு வருகிறார்கள். அதேசமயம் தமிழ்நாட்டிலிருந்து சென்ற வர்த்தகர்களும் பாவ்நகருக்கு வந்து நிலக்கடலையின் தரத்தைப் பாராட்டுகிறார்கள்.

நிலக்கடலை கொள்முதல்செய்ய குஜராத் சென்ற தமிழ்நாட்டு வணிகர்கள்

பல மாநிலங்களிலிருந்து வணிகர்கள் வருகின்ற காரணத்தினால் பாவ்நகர் சந்தையில் நிலக்கடலை நிறையவருகிறது. இதனால் தினசரி வருமானம் 4 முதல் 5 ஆயிரம் மடங்கு வரை கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இங்கு நல்ல தரமான நிலக்கடலை கிடைப்பதால் இதனை வாங்க தமிழ்நாட்டிலிருந்து பாவ்நகருக்கு வந்துள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வணிகர் மணிகண்டன் கூறுகையில், "கோண்டல், ராஜ்கோட், ஜம்காம்பலியா போன்ற மையங்களில் நிலக்கடலை வாங்க மொத்தம் 200 தமிழ்நாடு வணிகர்கள் சவுராஷ்டிராவுக்கு வந்துள்ளனர்.

அந்த நேரத்தில், பாவ்நகர் உள்ளிட்ட சவுராஷ்டிரா விவசாயிகளுக்கு 20 கிலோவுக்கு ரூ.800 முதல் 1,000 வரை கிடைக்கிறது. இதன் விலை குறைந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காபி டே சிஇஓ ஆனார் சித்தார்த் மனைவி மாளவிகா ஹெக்டே!

ABOUT THE AUTHOR

...view details