டெல்லி: தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020 அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான தரவரிசைப்பட்டியலை, மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூன் 30) வெளியிட்டார்.
இந்த தரவரிசைப்பட்டியலில் முதல் 7 இடங்களை ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. இதன் புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாடு 3ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு தமிழ்நாடு 14ஆவது இடத்திலிருந்தது.
இதுகுறித்து பியூஷ் கோயல் தெரிவிக்கையில், கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இந்த பலன் இன்று கிடைத்துள்ளது. இந்த தொழில் சீர்திருத்த செயல்திட்டம் பல்வேறு மாநிலங்களில் பிரதிபளிக்கப்படுவதை காணமுடிகிறது எனத் தெரிவித்தார்.
இந்த தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 15 தொழில் ஒழுங்குமுறை பிரிவுகளைக் கொண்ட 301 சீர்திருத்த அம்சங்களை உள்ளடக்கியதாகும். இதில் ஒற்றைச்சாளர நடைமுறை, தொழிலாளர், சுற்றுச்சூழல், துறை சார்ந்த சீர்திருத்தங்கள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது, வணிகத்திற்கு ஏற்ற சூழலை வளர்ப்பது, வணிகத்தை செயல்பாட்டில் மாநிலங்களின் செயல்திறன், வணிகம் செய்வதை எளிதாக்குவது உள்ளிட்டவையின்படி செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!