தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தை முந்திய தமிழ்நாடு... உணவுப்பாதுகாப்பில் முதலிடம்... - Tamil Nadu led Food Security

உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். இதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

tamil-nadu-led-indian-states-on-the-state-food-security-index-2021-2022
tamil-nadu-led-indian-states-on-the-state-food-security-index-2021-2022

By

Published : Jun 10, 2022, 2:12 PM IST

டெல்லி: நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4ஆவது மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜூன் 7ஆம் தேதி வெளியிட்டார்.

இந்த தரவரிசையின் அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களும் உள்ளன.

யூனியன் பிரதேசங்களை பொறுத்துதவரை ஜம்மு & காஷ்மீர் முதலிடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும், சண்டிகர் மூன்றாம் இடத்திலும் உள்ளன. உணவு பாதுகாப்பு சூழலில், போட்டி மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2018, 19ஆம் ஆண்டில் 5 அம்சங்களை அடிப்படையாக கொண்ட உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குறியீடு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதற்கு உதவி புரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு... கர்நாடகாவில் திருப்பம்...

ABOUT THE AUTHOR

...view details