மும்பை:மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.1) நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றார். இந்த கூட்டம் தனியார் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
முன்னதாக I.N.D.I.A கூட்டணியின் சார்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, 13 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் உள்ளார். இக்கூட்டணியின் முதலாவது கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதைத் தொடர்ந்து 3வது கூட்டத்திலும் பங்கேற்றார்.
இந்த வகையில், மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று (ஆக.31) சமூக வலைதளத்தில் முதலமைச்சரின் வருகையை அறிந்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சிறுமி,“ நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை எனவும், நான் உங்களை சந்திக்க விரும்புவதாகவும், நீங்கள் இங்கே வருகை தர உள்ளீர்கள் எனவும், என்னால் உங்களை சந்திக்க முடியாது எனவும், நீங்கள் நினைத்தால் என்னை சந்திக்கலாம் எனவும், எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன் என்றார். மேலும், எனது கொள்ளு தாத்தா காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் திமுக குடும்பம் எனவும், இந்த வீடியோவை நீங்கள் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.