திருச்சூர்:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குக் கோயிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான 32 சவரன் தங்கக் கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என கன்னியாகுமரி முதல் காசி வரை பல்வேறு கோயில்களுக்குச் சென்று கடும் விரதம் இருந்து பல சிறப்புப் பூஜைகளைச் செய்துள்ளார்.
இந்த நிலையில், கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு நேற்று(09.08.2023) காலை 11:35 மணிக்குச் சென்ற துர்கா ஸ்டாலின், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 32 சவரன் தங்கக் கிரீடம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்ய சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினார். மேலும், துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் மூலவருக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: "நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜகவுக்கு வரப்பிரசாதம்..." - பிரதமர் மோடி!