தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்! - தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி கடிதம்

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 16 மீனவர்கள் மற்றும் 102 மீன்பிடிப் படகுளை மீட்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதலமைச்சர் கடிதம்
முதலமைச்சர் கடிதம்

By

Published : Mar 14, 2023, 9:05 AM IST

சென்னை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளையும் மீட்க தூதரக ரீதியிலான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில், "நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12.03.2023 அன்று இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டதை குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த சிலர் மற்றும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவமாகும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். மேலும் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருப்பதாக கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குவதாக தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன் அனுப்பிய கடிதங்களில், இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும், வெளியுறவுத் அமைச்சர் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும், இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் பிரதமர் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பிரதமர் மோடிக்கு, கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்தில் முதலமைச்சர் துவக்கி வைப்பார்" - அமைச்சர் முத்துசாமி!

ABOUT THE AUTHOR

...view details