தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி..! உங்கள் ராசிக்கு எப்படி..? - 12 ராசிகளுக்கான பலன்கள்

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

tamil Horoscope for 1st December
இன்றைய ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 6:08 AM IST

மேஷம்: இன்று குதூகலங்கள் நிறைந்த நாளாக இருக்கும். அதனால் சிறப்பாகத் திட்டமிடவும். பணியைப் பொருத்தவரை, வழக்கமான நிலை இருக்கும். இன்று மாலையில், இன்ப அதிர்ச்சி உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் காதல் உறவிற்கு ரோஜாக்களைப் பரிசு வழங்கி, மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் குறித்த சிந்தனை இருக்கும், அது தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். ஆனால் மதிய நேரத்தில், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததால் சிறிது ஏமாற்றமாக உணர்வீர்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல், உங்கள் காதல் உறவுடன் விருந்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கவும்.

மிதுனம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்குக் கோப உணர்ச்சி அதிகம் இருப்பதன் காரணமாக, பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, நிதானமாகச் செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பணியிடத்தில், நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

கடகம்: உங்களது நேர்மறையான மற்றும் புத்திசாலித்தனமான அணுகுமுறை, உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்களைக் கொடுக்கும். நீங்கள் உங்களுக்காக நேரத்தைச் செலவிட்டு ஆளுமைப் பண்புகளையும் செயல்திறனையும் மேம்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள். வீட்டு அலங்காரத்தில், சில மாற்றங்கள் செய்யும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: உங்களது முக்கியத்துவம் மற்றும் செயல்திறனைக் குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல. எந்தவிதமான புதிர்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. அதனால் அந்தத் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும். இதன் காரணமாக வர்த்தகத் துறையில், மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவீர்கள்.

கன்னி: இன்று உங்களது கற்பனைத் திறன் அதிகம் இருக்கும். ஆண்டாண்டு காலமாக நீங்கள் பாதுகாத்து வந்த பொருட்களை நினைத்துப் பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் வீட்டைப் பொருத்தமான வகையில் மர சாமான்கள் அல்லது கலைப் பொருட்களால் அலங்காரம் செய்வீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு மிகப் பிரகாசமான நாளாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பீர்கள். இன்று மாலை உங்களுக்குக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அதனால் செலவுகளும் அதிகரிக்கும்.

விருச்சிகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கான பணிகளைச் செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக, அதிக நிதியைத் திரட்ட வேண்டிய தேவை இருக்கும். எனினும், இன்றைய நாளின் இறுதியில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவுகள் வலுப்படும்.

தனுசு: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது முக்கியம் ஆகும். உங்களது குறிக்கோள் மற்றும் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள். உங்களுக்கு விருப்பமான செயல்களை ஊக்கத்துடன் மேற்கொண்டு, மேலும் முன்னேறிச் செல்வீர்கள்.

மகரம்: தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து பெறும் ஆதரவு உங்களைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டும். அதன் காரணமாக உங்களுக்கு வரக்கூடிய இன்னல்களை அனைத்தையும் எளிதாகக் கடப்பீர்கள்.

கும்பம்: இன்று உங்களுக்குப் பிரகாசமான நாளாக உள்ளது. அனைவரின் பாராட்டு மற்றும் புகழ்ச்சி காரணமாக, நீங்கள் பணியில் மேலும் சிறந்து விளங்குவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பார்த்து திருப்தி அடைவார்கள். எனினும் உங்களது பணியில் உங்களுக்குத் திருப்தி இருக்காது. நிதானமாகச் செயல்படவும்.

மீனம்: இன்று உங்களுக்குக் குதூகலம் மற்றும் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தொலைவிலிருந்து நல்ல செய்தி வரக்கூடும். தொழில் துறையைப் பொருத்தவரை, நெடுநாட்களாக முடிக்கப்படாமலிருந்த பரிவர்த்தனை முடிக்கப்படும். இன்று வர்த்தகம் தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: திருமணம் ஆனவர்கள் இந்த வாரம் சிந்திக்க வேண்டியது என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details