தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவர் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி பத்தர் ஆவார். தற்போது இவர் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு மூன்று கிலோ தங்கத்தில் சங்கு, சக்கரம் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளார். இதன் மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும்.
திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 3 கிலோ தங்க காணிக்கை கொடுத்த தேனி பக்தர்! - தேனி மாவட்ட பக்தர்
அமராவதி: திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர் மூன்று கிலோ தங்க சங்கு, சக்கரங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
மூன்று கிலோ தங்க காணிக்கை
இது குறித்து அவர் கூறுகையில், "நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன். இந்த நோயிலிருந்து மீண்டுவந்தால் திருப்பதி வெங்கடேஷ்வரா சாமிக்கு தங்கத்தில் சங்கு, சக்கரம் தருவதாக வேண்டியிருந்தேன். அதுபோல் என் வேண்டுதலை தற்போது நிறைவேற்றிவிட்டேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ஒரு கோடி ரூபாய்