கட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள சாலையில் நேற்று (அக்-16)கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி இளைஞர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்து 6 கி.மீதூரம் ஓட வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், இரு சக்கர வாகனத்தின் பின்னால் இளைஞர் ஒருவர் இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த இளைஞனின் கை பைக்கில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளில் நான்கு-ஐந்து இளைஞர்கள் அவரை சாலையில் இழுத்துச் செல்வதை வீடியோவில் காணலாம்.
கயிறு கட்டி பைக்கில் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர்.. கடனால் நேர்ந்த கொடுமை.... - Lalbag police detained two accused
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று (அக்-16) கடனை திருப்பி செலுத்ததாத காரணத்தால் இளைஞர் ஒருவரை கையில் கயிறு கட்டி பைக்கில் கட்டி இழுத்து சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
Etv Bharatகடனை திருப்பி செலுத்தாத இளைஞரின் கையில் கயிறு கட்டி பைக்கில் இழுத்து சென்ற கொடூரம்
நேற்று மாலை கட்டாக்கின் சாலையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்நிகழ்வின் போது அங்கு இருந்த பொது மக்கள் எவரும் அந்த இளைஞர்களை தடுக்க வில்லை. இந்த வீடியோ வெளியானதையடுத்டு இச்சம்பவம் தொடர்பாக கட்டாக்கின் சுதாஹாட் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை லால்பாக் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு