டெல்லி:அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கன் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியதிலிருந்தே தாலிபன்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. வெறும் 10 நாள்களில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆப்கனை கைப்பற்றிவிட்டனர். அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் அதிபர் மாளிகை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
அதற்கு முன்னதாகவே, அப்போதைய அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, தாலிபன்கள் ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்து ஆப்கன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துவருகின்றனர். அதனடிப்படையில் பல்வேறு நாடுகள், ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டு மக்களை மீட்டுவருகின்றனர்.
சில நாடுகள் ஆப்கன் மக்களுக்கும் அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, இந்தியா இ-எமர்ஜென்சி விசாவை (அவசர நுழைவுஇசைவு) அறிமுகப்படுத்தி இந்திய, ஆப்கன் மக்களை மீட்க முன்வந்துள்ளது. இதனிடையே தாலிபன்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஆப்கன் செல்லும் ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்தை தடைசெய்துள்ளனர்.
ஆப்கன்-இந்தியா இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை