ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேறக் காத்திருந்த 150 பேரை தாலிபான்கள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கனில் 150 இந்தியர்கள் கடத்தல்? - 150 Indians kidnapped in Afghan
Taliban kidnap
12:40 August 21
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 150 பேரில் ஆப்கன் மக்கள் இருந்தாலும், அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இந்தச் செய்தியை ஆப்கனைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேப்போல் தாலிபான் செய்தித்தொடர்பாளர் அஹமதுல்லா வாசிக் இந்த கடத்தல் செய்தியை மறுத்துள்ளார்.
இதையும் படிங்க:'ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கிடங்காக துருக்கி இருக்காது'
Last Updated : Aug 21, 2021, 2:20 PM IST