தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடியில் கோயில் முன்புறப் பக்கவாட்டில் பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ளது. இக்கோயில் முன்புறம் பள்ளிவாசலில் தீக்குண்டம் வார்க்கப்பட்டு பூசாரி தீமிதித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் இரு மாநில எல்லையான தாளவாடியில் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் இடபுறப் பக்கவாட்டில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசலும் அடுத்தாக ராமர் கோயிலும் உள்ளன. ஆண்டுதோறும் தமிழ்நாடு கர்நாடக பக்தர்கள் இணைந்து இக்கோயிலில் குண்டம் திருவிழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
இதையடுத்து, இந்தாண்டுக்கான விழா நேற்றிரவு தொடங்கியது. இதில், மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்ற பிறகு கோயில் அருகே உள்ள பள்ளி வாசல் முன்பு விறகு அடுக்கி 60 அடி தீக்குண்டம் வார்க்கப்பட்டது.