டெல்லி:நாடு முழுவதும் பல்வேறு ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆபாச மிரட்டலுக்கும், பண மோசடிக்கும் உள்ளாகிவருகின்றனர். இதற்காக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மாநிலங்களவையில் இன்று (ஆக 2) கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், "ஆன்லைன் மூலம் கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத பல செயலிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதில் வெளிநாட்டு செயலிகளும் அடங்கும்.
சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் - digital loan apps in india
நாடு முழுவதும் செயல்பட்டுவரும் (வெளிநாட்டைச் சேர்ந்தவை உள்பட) சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
குறிப்பாக, தெலங்கானாவில் ஆன்லைன் கடன் மோசடி அதிகமாக உள்ளது. இங்கு விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதேபோல மற்ற மாநிலங்களிலும் சந்தேகத்திற்குரிய செயலிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதுபோன்ற வெளிநாட்டு மோசடி செயலிகளின் பின்னாலிருக்கும் நிறுவனங்களுக்கு உதவும் இந்திய குடிமக்கள் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சொல்லப்போனால் மோசடியில் ஈடுபடும் பெரும்பாலான செயலிகள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாதவை. தன்னிச்சையாக செயல்படுபவை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவில் குரங்கம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதா..? - மன்சுக் மாண்டவியா பதில்