உலகம் முழுவதும் காதல் சின்னமாக ரசிக்கப்படுவது டெல்லியில் உள்ள தாஜ்மஹால். ஆண்டுதோறும் இதனைச் சுற்றிப்பார்க்க ஏராளமான பயணிகள் பல நாடுகளிலிருந்து வருகைதருகின்றனர். இதற்கிடையில் கரோனா வைரஸ் (தீநுண்ணி) தொற்று காரணமாகக் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்ப்பதற்கான விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆக்ரா மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தாஜ்மஹால் சுற்றிப்பார்க்க முன்னதாக உள்நாட்டினருக்கு 50 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 1100 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது உள்நாட்டுப் பயணிகளுக்கு 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு 1100 ரூபாயிலிருந்து, 1200 ரூபாயும் நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாஜ்மஹாலின் பிரதான கோபுர வாசலுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 200 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், அது தற்போது 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இந்தப் புது கட்டணம் மூலம் மொத்தமாக உள்நாட்டினரிடமிருந்து 480 ரூபாயும், வெளிநாட்டினரிடமிருந்து 1600 ரூபாயும் வசூல்செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திடீர் விலை உயர்வால் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர் .