கடந்த மார்ச் மாதம், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், இந்த விதிகளை மீறி தப்லீக் ஜமாத் சமய மாநாடு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தப்லீக் ஜமாத் விவகாரம்: வெளிநாட்டவர் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதி!
டெல்லி: தப்லீக் ஜமாத் சமய மாநாட்டில் கலந்துகொண்ட எட்டு வெளிநாட்டவர் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதி வழங்குமாறு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 8 வெளிநாட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி சந்தீப் யாதவ் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது, தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அனுமதி வழங்கிய அவர் சில கட்டுப்பாடுகளையும் விதித்தார்.
வெளிநாட்டவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறுமாறு விசாரணை அலுவலருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிணைத் தொகையாக 30 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை விசாரணை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் வெளிநாட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.