தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Swara Bhasker: நடிகை ஸ்வரா பாஸ்கர் சொன்ன குட் நியூஸ்.. இணையத்தில் குவியும் வாழ்த்து! - ஸ்வரா பாஸ்கர் கர்ப்பம்

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்(swara bhasker) தாம் கர்ப்பமாக இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Swara Bhasker
ஸ்வரா பாஸ்கர்

By

Published : Jun 6, 2023, 3:45 PM IST

ஹைதராபாத்:பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். கடந்த 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்த போராட்டத்தில் சமாஜ்வாடி யுவ்ஜன் சபா கட்சியை சேர்ந்த ஃபாஹத் அமகதுவும் கலந்து கொண்டார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலமாக மாறியது.

இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், தாம் கர்ப்பமாக இருப்பதாக கணவர் ஃபாஹத்துடன் இருக்கும் 3 புகைப்படங்களை டிவிட்டரில் ஸ்வரா வெளியிட்டுள்ளார். வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Adipurush: எல்லா தியேட்டர்லயும் அனுமனுக்கு ஒரு சீட்.. ஆதிபுருஷ் படக்குழு அதிரடி அறிவிப்பு!

"சில நேரங்களில் உங்களது எல்லை பிரார்த்தனைகளுக்கும் ஒரே நேரத்தில் பதில் அளிக்கப்படுகின்றன. ஆசீர்வதிக்கப்பட்ட, நன்றியுள்ள, உற்சாகமான புதிய உலகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறோம். எங்கள் முதல் குழந்தையை வரும் அக்டோபர் மாதம் வரவேற்கிறோம்" என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஸ்வரா பாஸ்கரின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்கங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஸ்வரா பாஸ்கர், கடந்த 2009ம் ஆண்டு வெளியான Madholal Keep Walking என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு Tanu Weds Manu, Aurangzeb, Veere Di Wedding உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தளபதி 68 அப்டேட் எப்போது..? இயக்குநர் வெங்கட் பிரபுவின் சூசக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details