தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நரசிங்பூர் துவாரகா பீடத்தின் அடுத்த வாரிசு அறிவிப்பு - ஜோதிஷ்பீட பத்ரிநாத்தின் தலைவராக சுவாமி

மத்திய பிரதேச மாநிலம், நரசிங்க்பூரில் உள்ள துவாராகா பீடத்தின் சங்கரச்சாரியர் மறைவுக்கு பின்னர் பீடத்தின் அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Etv Bharatநரசிங்பூர் துவாரகா பீடத்தின் அடுத்த வாரிசு அறிவிக்கப்பட்டது.
Etv Bharatநரசிங்பூர் துவாரகா பீடத்தின் அடுத்த வாரிசு அறிவிக்கப்பட்டது.

By

Published : Sep 13, 2022, 11:29 AM IST

நரசிங்பூர்: மத்தியபிரதேசம் துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் வாரிசு யார் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதிஷ்பீட பத்ரிநாத்தின் தலைவராக சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதியும், துவாரகா சாரதா பீடத்தின் தலைவராக சுவாமி சதானந்த சரஸ்வதியும் நியமிக்கபட உள்ளனர். இந்த இருவரின் பெயர்களையும் சங்கராச்சாரியாரின் இறந்த உடல் முன் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் தனிப்பட்ட செயலாளர் சுவாமி சுபுதானந்த சரஸ்வதி அறிவித்தார்.

ஸ்வரூபானந்த சரஸ்வதியின் முதல் மற்றும் மூத்த சீடர்கள் சுவாமி சதானந்த சரஸ்வதி மற்றும் இரண்டாவது சீடர் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி ஆவர். வரது வாரிசுக்கான போட்டியில் இருவரும் ஈடுபட்டனர். சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதியை துவாரகா சாரதா பீடத்தின் தலைவராக நியமித்தார், அவர் உயிருடன் இருந்தபோது, ​​​​அங்குள்ள பொறுப்புகளை மட்டும் ஒப்படைத்தார். தற்போது பீடத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில் பிறந்தவர் ஆவார். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார். மேலும் மாணவப் பருவத்தில் மாணவர் தலைவராகவும் இருந்தார். இளமையிலேயே சங்கராச்சாரியார் ஆசிரமத்திற்கு வந்து சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதியிடம் தீட்சை பெற்று தண்டி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா என மாறினார். சங்கராச்சாரியாரின் பிரதிநிதியாக உத்தரகாண்ட் பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஜோதிஷ்பீடத்தின் பணியை அவர் கையாண்டு வருகிறார்.

சுவாமி சதானந்த சரஸ்வதி நரசிங்பூரின் பார்கி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முன்னாள் பெயர் ரமேஷ் அவஸ்தி. 18 வயதில் சங்கராச்சாரியார் ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்தார். பிரம்மச்சாரியின் தீட்சையுடன், அவரது பெயர் பிரம்மச்சாரி சதானந்த் ஆனது. பனாரஸில் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியால் தண்டி தீட்சைக்குப் பிறகு, அவர் தண்டி சுவாமி சதானந்தாவாக மாறினார். குஜராத்தில் உள்ள துவாரகா சாரதாபீடத்தில் சங்கராச்சாரியாரின் பிரதிநிதியாக சதானந்த் பணியாற்றி வருகிறார்.

சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் தனிப்பட்ட செயலாளர் சுபுதானந்த சரஸ்வதியும் தேர்ந்தெடுக்கப்படலாம் என பேசப்பட்டது. இருப்பினும் சங்கரச்சாரியார் உயிருடன் இருக்கும் போது நியமித்த சதானந்த சரஸ்வதி காசி வித்வத் பரிஷத் சங்கராச்சாரியாராக பதவியேற்றார்.

இதையும் படிங்க:ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details