ஒடிசா:பாலாசூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சகாரிகா நாத் இது குறித்து கூறியுள்ளதாவது, “ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் மகானா - தன்மயிக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இம்மாதம் 9ஆம் தேதி, தன்மயிக்கு, குழந்தை பிறந்தது.
தன்மயி, பச்சை உடம்புக்காரியாக இருந்ததன் காரணமாக, ஷிங்கிரி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மனைவி தன்மயிக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக அறிந்த சந்தன் மகானா, ஆத்திரமடைந்து உள்ளார். தனக்கு குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தையின் பிறப்பில் சந்தேகப்பட்டு, கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்று உள்ளார்.
அங்கு, தன்மயி குழந்தையை தனியாக விட்டுவிட்டு வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டு வந்தவர், தனது கணவர் சந்தன் மகானாவின் ஒரு கையில், பூச்சிக்கொல்லி மருந்தும், மறுகையில் சிரிஞ்ச் ஊசியும் இருந்தது. குழந்தையை பார்த்தபோது, அதன் கையில், ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து ஏற்றப்பட்டதன் அடையாளம் இருந்ததைக் கண்டு, தன்மயி அதிர்ந்து போனாள்.
என்ன செய்தாய் என்று, கணவனிடம் விசாரிக்க, முதலில் ஒன்றும் செய்யவில்லை என்று தெரிவித்த சந்தன் மகானா, பின், குழந்தையின் உடலில் ஊசி மூலம், பூச்சிக்கொல்லி மருந்தை உட்செலுத்தியதை ஒப்புக் கொண்டார். இதனைக் கேட்ட அதிர்ச்சியில், தன்மயி கத்தி கூச்சலிட்டாள். தன்மயியின் கூச்சலைக் கேட்டு, ஓடி வந்த அவர்ன் பெற்றோர், என்னவெண்று விசாரிக்க, தனது கணவன், குழந்தையின் பிறப்பில் சந்தேகப்பட்டு, இத்தகைய மகாபாதக செயலை செய்து விட்டதாக கூறினார்,
உடனடியாக அவர்கள், குழந்தையை மீட்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமான நிலையில், ஷிங்கிரி கிராமத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள பாலாசூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடல்நிலையில், இன்னும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான புகார் எதுவும் வரவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தையும் படிங்க: Wrestlers Protest: பதக்கங்களை கங்கையில் வீசிவிட்டு, சாகும்வரை உண்ணாவிரதம்: மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!