மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளிடம், அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், தற்போது வரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலவரத்தை உருவாக்கும் விதமாக, அடையாளம் தெரியாத ஒருவர், விவசாயிகள் நான்கு பேரை கொலை செய்ய ஏவப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.