திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு முன் குரங்கம்மை என்ற நோய்ப் பல நாடுகளில் பரவியது. இது விலங்குகளின் வைரஸால் மனிதனுக்கு பரவிய நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இதனையடுத்து இந்த நோய் குறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. குரங்கம்மை நோய் முதலில் 1980ஆம் ஆண்டு பரவியது. இந்நோய் ஒரு அம்மை வகையாகும். இந்நோய்ப் பாதிக்கப்பட்டவரின் வியர்வை மற்றும் உடலில் இருந்து வெளிப்படும் கழிவுகளால் பரவுகிறது. நோய்ப் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு நோய் வேகமாகப் பரவும்.
முன்னதாக அமெரிக்காவில் 70 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியானது. மேலும் 2003இல் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் குரங்கம்மை நோய்த்தொற்று ஏற்பட்டது. தற்போது கேரள மாநிலத்தில் ஐக்கிய அரபுகள் நாட்டிலிருந்து வந்தவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.