சாப்ரா:பீகார் மாநிலம், சாப்ரா கிராமத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 65-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் சாராய வியாபாரிகள் மற்றும் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு டெல்லியில் தலைமறைவாக இருந்த அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் அடங்காத நிலையில், மேலும் இருவர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமன் மற்றும் மருமகன் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், நோய் வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.