டெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது, “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என பாஜக எம்பி., சுஷில் குமார் மோடி கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் அளித்த நோட்டீஸில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், திரிபுரா, கோவா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
2022 மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் 1989-90களில் ஜம்மு காஷ்மீரில் பண்டிட்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து பேசுகிறது.