தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மலைக்க வைக்கும் விலை - இதுதான் குஜராத் 'கோல்ட் ஸ்வீட்' - தங்க ஸ்வீட் விற்பனை

ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்னதாக குஜராத் மாநிலத்தில் தங்க ஸ்வீட் அமோகமாக விற்பனை ஆகிறது.

Gold Gahri
Gold Gahri

By

Published : Aug 20, 2021, 5:04 PM IST

ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்கள் முழுவதும் இப்பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இனிப்புக்கு பெயர் போன குஜராத்தியர்கள் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்னதாக தங்க ஸ்வீட் ஒன்றை விற்பனை செய்துவருகின்றார்கள். சூரத்தை சேர்ந்த '24 கேரட் மிட்டாய் மேஜிக் என்ற கடை, 24 கேரட் தங்கத்தால் கவர் இலையால் கவர் செய்யப்பட்ட விலை உயர்ந்த இந்த ஸ்வீட்டை விற்பனை செய்துவருகிறது.

இந்த ஸ்வீட் ஒரு கிலோ ரூ.9,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்வீட்டுக்கு 'கோல்ட் காரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் தங்கத்தின் மகத்துவம் விளக்கப்பட்டுள்ளது எனவும், தங்கம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ ஸ்வீட் ரூ.9,000க்கு விற்பனை

ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்தாக ஆண்டு தோறும் இந்த தங்க இனிப்பை தயாரிக்கும் வழக்கத்தை இவர்கள் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2021- புது லுக்கில் கலக்கும் தோனி

ABOUT THE AUTHOR

...view details