டெல்லி : ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட செசன்ஸ் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஆட்டோ மோதி கொல்லப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வழக்கின் அத்தனை தகவல்களையும் சமர்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.