டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள விக்டோரியா கெளரி சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர், அவரது வெறுப்பு பேச்சு சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதால் அவரது நீதிபதி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், விக்டோரியா கெளரி அரசியல் பின்புலம் கொண்டவர், அவரது வெறுப்பு பேச்சு சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. எனவே அவரை நீதிபதியாக பதவியேற்க அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.