தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீடிப்பு சட்டவிரோதம்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி! - அமலாக்கத்துறை இயக்குனர் பதவி நீட்டிப்பு

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது சட்டவிரோதம் என தெரிவித்து உள்ள உச்ச நீதிமன்றம் ஜூலை 31ஆம் தேதி வரை அவர் பணியில் நீடிக்க அனுமதி அளித்து உள்ளது.

Supreme Court
Supreme Court

By

Published : Jul 11, 2023, 3:39 PM IST

டெல்லி : அமலாக்கத்துறை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா மூன்றாவது முறையாக தொடரும் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் ஜூலை 31ஆம் தேதி வரை அவர் பணியில் நீடிக்க அனுமதி அளித்தது.

1984 பேட்ச்சை சேர்ந்த சஞ்சய் குமார் மிஸ்ராவை கடந்த 2018ஆம் ஆண்டு அமலாக்கத்துறையின் இயக்குனராக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலம் நிறைவு பெற்ற நிலையில், மேலும் ஒராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த பணி நீட்டிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து நிலையில், அதிலிருந்து அவரது பணிக்காலம் இரண்டு மாதங்களில் முடிவடைய இருந்ததால் பணி நீட்டிப்புக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களை அவர்களது கட்டாய இரண்டு ஆண்டுகள் பணிக் காலத்திற்கு மேல், கூடுதலாக 3 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இந்த சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ஒரு அதிகாரி இல்லாமல் போனால் ஒட்டுமொத்த அமலாக்கத் துறையும் செயலழிந்து போய்விடுமா என்று கேள்வி எழுப்பினர்.

நிதி நடவடிக்கை பணிக் குழுவின் மதிப்பீட்டை கருத்தில் கொண்டு சஞ்சய் குமார் மிஸ்ராவை பணி நீடிப்பு செய்ததாகவும், நவம்பர் 2023க்கு பிறகு அவர் பணியில் நீடிக்க மாட்டார் என்றும் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மேலும், சஞ்சய் குமார் மிஸ்ரா பணி நீட்டிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்றும் பண மோசடி வழக்கில் காங்கிராஸ் தலைவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது சட்டவிரோதம் என்றும், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதாகவும் தீர்ப்பு வழங்கினர். வரும் ஜூலை 31ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குனர் பணியில் நீடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க :ஆந்திராவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details