- சுகாதாரம் என்பது மலிவு விலையில் சிகிச்சை:நாட்டில் கோவிட்-19 அறிகள் கண்டறியப்பட்ட நிலையில் வழக்கொன்றை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு, சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை. அந்த சுகாதார உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது என்று கூறினர்.
- கோவிட்-19 சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை:கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரை, தடுப்பூசியை கண்டறியும் முனைப்பில் சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளும் முனைப்பு காட்டிவரும் நிலையில், கரோனா நோயை குணப்படுத்தும் மருந்துகள், மாத்திரைகள் என விளம்பரம் செய்ய ஹோமியோபதி, சித்தா உள்ளிட்ட மருத்துவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விதித்தது.
- கரோனா நோட்டீஸ் தேவையில்லை:உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு டிசம்பர் 9ஆம் தேதி கோவிட்-19 பாதிப்பாளர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவது தேவையில்லை என மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது.
- நிதி இழப்புகளை தொழிலாளிகளின் தோள்களில் சுமத்துவதா? உச்ச நீதிமன்றம்:கோவிட் -19 பெருந்தொற்று பரவலால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி மற்றும் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஊழியர்களின் பணி நேரம் அதிகரிப்பு, கூடுதல் ஊதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்ககோரிய குஜராத் அரசின் முடிவுக்கு தடை கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு அக்டோபர் 1ஆம் தேதி விசாரணை நடத்தினார். அப்போது, “நிதி இழப்புகளை தொழிலாளிகளின் தோள்களில் சுமத்த கூடாது” என்று கூறிய நீதிபதிகள், குஜராத் அரசின் முடிவுக்கு தடை விதித்தனர்.
- பிஎம் கேர் பண்ட், என்டிஆர்எஃப் விவகாரம்: கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் பிஎம் கேர் அறக்கட்டளை பணத்தை, என்டிஆர்எஃப் உடன் இணைத்து மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என்று தாக்கல் செய்ய மனுவை ஆகஸ்ட் 18ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு என்.டி.ஆர்.எஃப் (NDRF) மற்றும் பிஎம் கேர் ஆகிய இரண்டும் வெவ்வேறு நோக்கத்துடன் பெறப்பட்ட நிதிகள் எனக் கூறி அந்த நிதியை என்டிஆர்எஃப்க்கு (NDRF) மாற்ற வாய்ப்பு இல்லை எனக் கூறினர்.
- சிறைக்கைதிகளை விடுவிக்க உத்தரவு: கோவிட்-19 பரவல் நாட்டு மக்களை அச்சுறுத்திய நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உயர் மட்ட குழு அமைத்து, சிறையில் வாடும் சிறைகைதிகளுக்கு நான்கு அல்லது ஆறு வாரம் பரோல் அளிக்கலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே தலைமையிலான நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சூர்ய காந்த் அமர்வு உத்தரவிட்டது.
- சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து:கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மாணவர்களை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என்று ஜூன் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏஎம் கன்வில்ஹர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா, சிபிஎஸ்இ பத்தாம், பன்னிரெண்டாம் மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்தனர்.
- கோவிட் இலவச சிகிச்சை பரிந்துரை: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இலவச கரோனா கண்டறிதல், பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். ரவீந்திர பட் இந்தக் கோரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தனர்.
- நீதிமன்றங்களில் வீடியோ கால் விசாரணை: கோவிட்-19 பரவல் காரணமாக நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் நேரில் ஆஜராகி வாதாட தடை விதிக்கப்பட்ட நிலையில், வீடியோ கான்பரன்ஸிங் விசாரணை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
- குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு: நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு (சி.சி.ஐ) வைரஸ் தடுப்பு வழிமுறைகளை வெளியிட்டது.
கோவிட்- 19 பரவலும் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளும்! - பிஎம் கேர் பண்ட்
கோவிட் - 19 பரவலுக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து பார்க்கலாம்.

Supreme Court Orders In Matters Related To COVID-19 COVID-19 Supreme Court கோவிட் 19 உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள் உச்ச நீதிமன்றம் கரோனா கரோனா நோட்டீஸ் பிஎம் கேர் பண்ட் சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து
இதையும் படிங்க: 2020 - இந்தியா ஒரு பார்வை