தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் - உச்ச நீதிமன்றம் - மாணவி தற்கொலை வழக்கு தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவிற்கு மாணவியின் தந்தை பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme Court
Supreme Court

By

Published : Feb 14, 2022, 12:15 PM IST

Updated : Feb 14, 2022, 3:13 PM IST

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற அமர்வின் முன் வந்தது. வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழ்நாடு காவல்துறையே வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை எனவும் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே வழக்கு விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதேவேளை, தமிழ்நாடு அரசின் மேல் முறையிட்டு மனுவிற்கு மாணவியின் தந்தை நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் 54 சீன செயலிகளுக்குத் தடை

Last Updated : Feb 14, 2022, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details