டெல்லி:ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய சிபிஐ தாக்கல் செய்த மனுவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்து ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2014ஆம் ஆண்டு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சட்ட விரோதமாகச் சொத்துக்கள் சேர்த்ததாகவும், இருவரும் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் மற்றும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஐ தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.