கேரள கடல் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் அஜஸ் பிங்க், ஜெலஸ்டின் ஆகியோரை, அப்பகுதியாக இத்தாலிய கப்பலில் வந்த கடற்படை வீரர்கள், மாஸிமிலியனோ லத்தோரே மற்றும் சல்வத்தோரே க்ரோனே ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிறைவிடுப்பில் சொந்த நாடு திரும்பி, விசாரணையில் பங்கெடுத்தனர்.
சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த நீதி விசாரணை:
நாடு திரும்பிய இருவரையும் மீண்டும் இந்தியாவில் ஒப்படைக்க முடியாது என இத்தாலி முரண்டுபிடித்து, சர்வதேச நீதிமன்றத்தை நாடியது.
அப்போது இந்தியா இத்தாலிய கடற்படை வீரர்கள் மீது, தங்கள் நாட்டின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்றும்; ஆனால், பாதிக்கப்பட்ட தரப்புக்கு உரிய இழப்பீடு பெற உரிமை உண்டு என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.
இருப்பினும், இத்தாலிய சட்டங்களின்படி இந்த கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்; இத்தாலிய கடற்படையினரால் கொல்லப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களின் குடும்பத்தினருக்கு இத்தாலி அரசு கொடுத்த ரூ. 10 கோடி இழப்பீட்டுத்தொகையை இந்திய அரசுக்குச் செலுத்தவேண்டும் எனவும் கூறி, கடந்த 9ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.