தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது.

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை
தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

By

Published : Aug 4, 2023, 3:07 PM IST

Updated : Aug 4, 2023, 3:32 PM IST

டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பி. ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தேனி தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.

மிலானி தாக்கல் செய்த மனுவில், ஓ.பி. ரவீந்திரநாத் அதிகார துஷ்பிரயோகம் செய்தது, வங்கிக் கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது, அந்த பிரமாணப் பத்திரத்தில் திருத்தம் செய்தது, தேர்தலின் போது, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பு அளித்தார். ஓ.பி. ரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கி இருந்தார்.

இந்நிலையில், ஓ.பி. ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த தடையின் மூலம், ஓ.பி. ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி தப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவு நிறுத்திவைப்பு!

Last Updated : Aug 4, 2023, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details