வேளாண் சட்டங்கள் விவகாரம்: குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு - agri laws
12:49 January 12
டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 45 நாள்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். இதையடுத்து, இந்தச் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
இதனை விசாரித்த நீதிபதிகள், வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கமுடியுமா எனக் கேள்வியெழுப்பினர். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் கேட்டறிந்து பதிலளிக்க அரசு தரப்பு வழக்குரைஞருக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் வரவேற்பு தெரிவித்துள்ளது.