டெல்லி:நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. தொற்றின் தீவிரத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காததால், வட மாநிலங்களில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஜூலை 31வரை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி! - ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படவுள்ள ஸ்டெர்லைட் ஆலை
11:59 April 28
ஆக்ஸிஜன் உற்பத்திக்காகத் திறக்கப்படவிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதிவரை மட்டுமே இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருவதால், தூத்துகுடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, அதனை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதியளிக்குமாறு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில், ஆலையை திறக்க முதலில் மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், அனைத்து கட்சியினரின் ஒப்புதல் பெற்று சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க சம்மதித்து.
மேலும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில் இன்று(ஏப்.28) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 31ஆம் தேதிவரை மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு அப்போதைய சூழலைப் பொறுத்து ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான அனுமதி நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.