புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து, கடந்த வாரம் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
புதுச்சேரி முதலமைச்சர் குணமடைய வேல் ஏந்திப் பிரார்த்தனை! - pondi cm
புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நாளை மாலை வீடு திரும்புகிறார்
இந்நிலையில், ரங்கசாமி கரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாகவும், நாளை (மே 16) மாலை புதுச்சேரி திரும்புகிறார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ரங்கசாமியின் ஆதரவாளரான குமார், முதலமைச்சர் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைய வேண்டி, புதுச்சேரி, சாராம் பகுதியிலிருந்து அப்பா பைத்திய சாமி கோயிலுக்கு, ரங்கசாமியின் படம், கையில் வேல் ஆகியவற்றை ஏந்தி, காலில் செருப்பு அணியாமல் நடந்து சென்று பிரார்த்தனை செய்தார்.
இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதி வழங்கிய சிறைக்கைதி!