தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை கிடையாது! - supreme court allow sterlite

Sterlite
ஸ்டெர்லைட்

By

Published : Apr 27, 2021, 12:10 PM IST

Updated : Apr 27, 2021, 1:51 PM IST

12:05 April 27

தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

அதில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவை, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் 2 உள்ளூர் மக்கள் கொண்ட மேற்பார்வை குழு ஒன்றையும் அமைக்கலாம். அதனை நிபுணர்கள் குழு தேர்வு செய்யும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகக்கூடிய ஆக்சிஜனை மத்திய அரசு பிரித்தளிக்கும். ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை வழங்க முடியாது. அளவை மத்திய அரசே முடிவு செய்யும். ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி வேதாந்தா நிறுவனத்தின் வேறெந்த ஆதாயத்திற்காகவும் கிடையாது.ஆக்சிஜன் தயாரிக்க ஆலைக்குள் செல்வோரின் விவரங்களை, நிபுணர் குழுவிடம் வேதாந்தா நிறுவனம் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை

Last Updated : Apr 27, 2021, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details