நாட்டில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்கான உணவுப் பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய மறைமுக வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற 48ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதில், அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அங்கன்வாடி பள்ளிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தின் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போதிலிருந்து நடைமுறைக்கு வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா சீரோ சர்வே முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது - ரன்தீப் குலேரியா