மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த் - Apollo Hospital, Hyderabad
15:22 December 27
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.27) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், கட்டாயம் ஒருவாரத்திற்கு ஓய்வில் இருக்கவேண்டும், மன அழுத்தம் தரக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது, கரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை அமையும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மருத்துவமனை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.