புவனேஸ்வர்:பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, ஏவுகணையின் முழு திறனும் நிரூபிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை அமைப்பின் மூலம் நீர்மூழ்கி டார்பிடோக்கள் கூடுதல் வேகத்துடன் இலக்கை எட்டிவிடும். பொதுவாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து மாற்றொரு நீர்மூழ்கி கப்பலையோ அல்லது மேற்பரப்பிலிருக்கும் கப்பலையோ தாக்க டார்பிடோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.