தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தாயார் மறைவு - முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தாயார் மீனல் கவாஸ்கர் காலமானார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தாயார் மறைவு
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தாயார் மறைவு

By

Published : Dec 26, 2022, 12:23 PM IST

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தாயார் மீனல் கவாஸ்கர் காலமானார். அவருக்கு வயகு 95. மீனல் கவாஸ்கர் சில மாதங்களாக உடல்நிலை பின்னடைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இந்த நேரத்தில் சுனில் கவாஸ்கர் அவருடன் இருந்ததால் ஐபிஎல் தொடரின்போது தொகுத்து வழங்க அவரால் வர முடியவில்லை. இதையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனால் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்க தொடங்கினார். வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் சென்று இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையிலேயே மீனல் கவாஸ்கர் காலமானார். அதைத்தொடர்ந்து அவர் வங்கதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு திரும்பினார். மீனல் கவாஸ்கருக்கு இன்று (டிசம்பர் 26) இறுதி சடங்குகள் நடக்கிறது.

அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கியப் பங்காற்றினார். 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனிடையே 125 டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களுடன் 10,125 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,092 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:இந்திய ஹாக்கி கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details