சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் ஜுனாகுடா கிராமத்தில் கடந்த 3ஆம் தேதி நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
நக்சல் தாக்குதல்: உயிரிழந்த உ.பி. வீரரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் அறிவித்த யோகி!
லக்னோ: நக்சல் தாக்குதலில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்தச் சண்டையின்போது, நக்சல்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் 22 வீரர்கள் மரணமடைந்தனர், 32 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ் குமார் யாதவும் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நேற்று (ஏப். 4) உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்யா மாநகரின் மேயர் ரிஷிகேஷ் உபத்யாய் செய்தியாளர்களிடம், "சத்தீஸ்கரின் சுக்மா-பிஜாபூர் எல்லையில் நடைபெற்ற நக்சல் தாக்குதலில் உயிரிழந்த தலைமைக் காவலர் ராஜ் குமார் யாதவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்" என்றார்.