தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் தேர்வு - காங்கிரஸ் வெற்றி

இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு தேர்வு செய்யப்பட்டு நாளை பதவியேற்க உள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் தேர்வு
இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் தேர்வு

By

Published : Dec 10, 2022, 8:55 PM IST

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 40 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்டியை பிடித்துள்ளது. பாஜகவுக்கு 25 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்துவந்தது.

இதுகுறித்து ஆலோசிக்க நேற்று (டிசம்பர் 9) காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய கட்சித் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இன்று (டிசம்பர் 10) சுக்விந்தர் சிங் சுக்குவை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி சுக்விந்தர் நாளை(டிச.11) காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார். அதேபோல முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடானில் இருந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் 58 வயதான சுக்விந்தர் சிங் சுக்கு. இவர் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு

ABOUT THE AUTHOR

...view details