தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணமோசடி - நடிகை ஜாக்குலின் நாளை ஆஜராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சம்மன்! - சுகேஷ் சந்திரசேகர் வழக்கு

பண மோசடி தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, நடிகை ஜாக்குலினுக்கு மூன்றாவது முறையாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி ஜாக்குலின் நாளை ஆஜராகிறார்.

Sukesh
Sukesh

By

Published : Sep 13, 2022, 9:29 PM IST

டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. சுகேஷ் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜாக்குலினுக்கு, மோசடி செய்து பறித்த பணத்தில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பண மோசடி தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் சம்மன் அனுப்பினர். ஆனால், ஜாக்குலின் ஆஜராகவில்லை. அடுத்தகட்டமாக இன்று (செப்.13) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. படிப்பிடிப்பு காரணமாக ஆஜராக முடியவில்லை என்றும், மற்றொரு நாள் ஆஜராக அனுமதிக்கும்படியும் ஜாக்குலின் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து மூன்றாவது முறையாக நாளை(செப்.14) ஆஜராக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், நடிகை ஜாக்குலினை சுகேஷுக்கு அறிமுகப்படுத்திய பிங்கி இராணிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெயர்

ABOUT THE AUTHOR

...view details