2020ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(NRCB-National Crime Records Bureau) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்தாண்டு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123ஆக இருந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கையானது சுமார் 14 ஆயிரம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 418 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழ்நாடு மீண்டும் இரண்டாவது இடம்
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 ஆயிரத்து 909 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 883 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14 ஆயிரத்து 578 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.