தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார் சுதாகரன்! - Sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில், சுதாகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையானார்.

விடுதலையானார் சுதாகரன்
விடுதலையானார் சுதாகரன்

By

Published : Oct 16, 2021, 12:11 PM IST

Updated : Oct 16, 2021, 1:13 PM IST

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், 2017 பிப்ரவரி 15 அன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிடையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சசிகலா, இளவரசி தண்டனைக் காலம் முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையானார் சுதாகரன்

சுதாகரன் அபராதத் தொகையான 10 கோடி ரூபாய் செலுத்தாததால் அவருக்கு தண்டனைக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அவரது தண்டனைக் காலம் முடிவடைந்து இன்று அவர் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார்.

இதையும் படிங்க: சசிகலா அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது

Last Updated : Oct 16, 2021, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details