பீகார்: பாட்னா ரயில் நிலைய தகவல் பலகையில் அபாச வீடியோ ஒளிபரப்பானது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் ஜங்சன் வசதி கொண்டது. உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்வேறு ரயில்கள் பாட்னா ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதால் பாயணிகள் வசதிக்காக நிலையத்துன் முன் ராட்சத மின் தகவல் பலகை வைக்கப்பட்டு ரயில்கள் குறித்த தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று ( மார்ச். 19 ) இரவு 9.30 மணி அளவில் பாட்னா ரயில் நிலையத்தின் வெளியே வைக்கப்பட்டு இருந்த தகவல் பலலையில் திடீரென ஆபாசம் படம் ஒளிபரப்பத் தொடங்கின. ரயில் நிலையத்தின் முன் குடும்பத்தினருடன் நின்று கொண்டு இருந்த பொது மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ரயில் நிலைய நிர்வாகத்திற்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் பலகைக்கு இணைப்பை ரயில் நிலைய அதிகாரிகள் துண்டித்ததால் ஆபாச வீடியோ மேற்கொண்டு ஒளிபரப்பாமல் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பேசிய ரயில்வே போலீசார், ரயில் நிலைய தகவல் பலகையில் ஏறத்தாழ 4 நிமிடங்கள் ஆபாச வீடியோக்கள் ஒளிபரப்பட்டன. முதற் கட்ட விசாரணையில் ரயில் நிலைய தகவல் பலகையை ஹேக் செய்த இந்த வேலை நடந்திருப்பது தெரிய வந்து உள்ளதாக கூறினர். ஹோலி பண்டிகைக்கு முன்னும் இதேபோல் ஆபாச வீடியோக்கள் தகவல் பலகையில் ஒளிபரப்பப்பட்டதாகவும் ரயில் பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:OTT தளங்களில் ஆபாச வசனங்கள் இருந்தால் நடவடிக்கை - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் எச்சரிக்கை!