மைசூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள சித்தார்த்தா நகரைச் சேர்ந்தவர்கள் சிவராமு, அனந்த ராமையா. இவர்கள் இருவரும் நேற்று (ஜூன் 24) ஸ்கூட்டரில் கே.ஆர்.பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, தசரகுப்பே அருகே ஸ்கூட்டர் திடீரென பற்றி எரியத் தொடங்கியது.
சாலையில் செல்லும்போதே ஸ்கூட்டரில் பற்றிய தீ... ஒருவர் உயிரிழப்பு... - கர்நாடகா
கர்நாடகாவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் திடீரென தீ பற்றியதில், ஒருவர் உயிரிழந்தார்.
சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரில் திடீரென பற்றிய தீ - ஒருவர் பலி!
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிவராமு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேநேரம் அனந்த ராமையா தொடர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதையும் படிங்க:கையில் 2 குழந்தை; கணவரை சேர்த்து வையுங்கள் - நிறைமாத கர்ப்பிணி கண்ணீர் புகார்...