ஒடிசா : 22 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஈரான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் பூரி கடற்கரையில் பிஃபா கால்பந்து போட்டி குறித்து 8 அடி உயர மணற்சிற்பத்தை பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக்,உருவாக்கி உள்ளார். போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் இதனை வடிவமைத்துள்ளார்.