நடந்து முடிந்த 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில்தான் குஜராத் அணி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இந்தப் போட்டியில் மோசடி நடத்திருப்பதாகவும், குஜராத் அணியின் வெற்றி ஏற்கெனவே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியின் முடிவு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஐபிஎல் போட்டி முடிவுகளில் மோசடி நடந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகள் கருத்து தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மறைமுகமான சர்வாதிகாரியாக இருப்பதால், மத்திய அரசு இதுதொடர்பாக விசாரிக்காது. இவற்றை தெளிவுபடுத்த வழக்கு விசாரணை தேவைப்படலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிரமணியன்சுவாமியின் இந்த கருத்தில் உண்மை இருக்கலாம் என்றும், குஜராத் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து பாஜக குஜராத் அணிக்கு சாதகமாக வெற்றியை நிர்ணயித்திருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றிக்கோப்பையுடன் பேருந்தில் வலம்வந்த குஜராத் டைட்டன்ஸ்!