தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்! - Su Venkatesan madurai MP Speech Karnataka Hijab issue in Parliament

"சக மாணவர்களுக்குத் தண்டனை வேண்டாம், செய்தது தவறு என்று உணர்ந்தால் போதும்” என்று கூறியுள்ளார், கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட மாணவி முஸ்கான். அந்த வார்த்தை எந்த மதவெறியையும் மண்டியிடச்செய்யும் ஆற்றல் கொண்டது. ஏனெனில் இது ராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை, ஏசுவின் வார்த்தை, எதிரிகளை வீழ்த்த மனிதர்கள் கண்டறிந்த மகத்தான வார்த்தை. இந்த அவை முழுவதும் இந்த நேரத்தில் எதிரொலிக்க வேண்டிய வார்த்தை' என்று சு.வெங்கடேசன் பேசினார்.

மதவெறியால் மாணவர்களை துண்டாடாதீர்! - நாடாளுமன்றத்தில் சு வெங்கடேசன், நீ உட்காரு முதலில்.. கர்நாடக பாஜக எம்பிக்களுக்கு எதிராக மக்களவையில் சீறியா - சு.வெங்கடேசன்
நீ உட்காரு முதலில்.. கர்நாடக பாஜக எம்பிக்களுக்கு எதிராக மக்களவையில் சீறியா - சு.வெங்கடேசன்

By

Published : Feb 9, 2022, 8:48 PM IST

டெல்லி: மக்களவையில் இன்று (பிப்.9) பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கர்நாடகாவில் பள்ளி மாணவிகளுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கருத்தை முன்வைத்தார்.

கர்நாடகாவில் மாநில கல்வி மையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது குறித்து கேள்வியெழுப்பினார்.

மக்களவையில் பேசிய அவர், 'ஜனவரி 15ஆம் தேதி தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சியில் சிறார் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி பிரதமரின் மாண்பைக் குறைத்து விட்டது என்று சொல்லி ஒன்றிய இணையமைச்சர் (எல்.முருகன் ) அவரே முன்வந்து புகாரினைக் கேட்டு வாங்கி, அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.

கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்

இன்று கர்நாடகாவில் என்ன நடக்கிறது. ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது.

தன்வயதையொத்த மாணவர்களோடு கலந்துரையாடி, சமூகமயமாகும் தேவையிலிருக்கும் மாணவ சமூகத்தின் முன்னுரிமையைக் குலைத்துப் போடுகிறார்கள்.

’நீ உட்காருப்பா முதல்ல...’ கர்நாடக பாஜக எம்பிக்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்

சிறார்கள் தலையில் கிரீடம் அணியவும் விடமாட்டீர்கள். மாணவிகள் ஹிஜாப் அணியவும் விடமாட்டீர்கள். பள்ளிக்குழந்தைகள் நாடகம் போடுவதும், கல்லூரி மாணவர்கள் ஆடை அணிவதும் உங்களின் உத்தரவின்படி தான் நடக்க வேண்டுமா?

லாவண்யா மரணத்தில் மதமாற்ற மர்மம் இருக்கிறதா என்று துப்புதுலங்க ஓடிய குழந்தைகள் ஆணையம் கர்நாடகத்துக்கு ஏன் செல்ல மறுக்கிறது? சிறுவர்களின் நாடகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு, இப்பொழுது ஏன் பேச மறுக்கிறது. 'துண்டு துணியை வைத்து எங்கள் கல்வி உரிமையைப்பறிக்காதீர்கள்' என்று முழங்கினாள், வீரப்பெண் முஸ்கான்.

'சக மாணவர்களுக்குத் தண்டனை வேண்டாம். செய்தது தவறு என்று உணர்ந்தால் போதும்' என்று கூறியுள்ளார், அந்த பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலப்பெண், முஸ்கான்.

அந்த வார்த்தை எந்த மதவெறியையும் மண்டியிடச்செய்யும் ஆற்றல் கொண்டது. ஏனெனில், இது ராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை, ஏசுவின் வார்த்தை. எதிரிகளை வீழ்த்த மனிதர்கள் கண்டறிந்த மகத்தான வார்த்தை. இந்த அவை முழுவதும் இந்த நேரத்தில் எதிரொலிக்க வேண்டிய வார்த்தை.

மதவெறியால் மாணவர்களை துண்டாடாதீர்கள்!

கிரீடமோ, ஹிஜாப்போ அவரவர் உரிமை. மத வெறியால் மாணவர்களைத் துண்டாடுவதை அனுமதிக்க முடியாது' என மக்களவையில் கர்நாடக பாஜக எம்.பி.க்களின் காட்டுக்கூச்சலுக்கு இடையில் சு.வெங்கடேசன் எம்.பி., ஹிஜாப் விவகாரத்தில் மாணவி முஸ்கானின் உரிமைக் குரலைப் பிரதிபலித்தார்.

இதையும் படிங்க: சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details