டெல்லி: இந்திய அளவில் குழந்தைகளின் வளர்ச்சித்திறன் 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைந்துள்ளதாக NFHS(தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு ) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பெரும்பாலான மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்திய அளவில் கடந்த 4 வருடங்களுக்கு பின் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு இதற்கு முன்பு 4 முறை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது 5 வது ஆய்வு அறிக்கையாகும்.
குழந்தைகளின் வளர்ச்சித் திறன் குறைவதற்கு குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் குறைபாடு ஏற்படுதல், அடிக்கடி உடல் நலக் குறைபாடு உண்டாதல் மற்றும் போதுமான உளவியல் தூண்டுதல் இல்லாமை ஆகியவை காரணமாக உள்ளன. இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குழந்தைகளின் வளர்ச்சித்திறன் குறைபாடு விகிதம்;-
எண் | இடங்கள் | குழந்தைகளின் வளர்ச்சித்திறன் குறைபாடு விகிதம் |
---|---|---|
1 | கிராமபுறபகுதிகள் | 37% |
2 | நகர்ப்புறபகுதிகள் | 30% |
3 | புதுச்சேரி | யூனியன் பிரதேசங்களில் குறைந்தபட்சமாக 20% |
4 | மேகாலாயா | யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக 47% |
5 | ஹரியானா, உத்தரகாண்ட்,ராஜஸ்தாண், உத்தரப்பிரதேசம் மற்றும் சிக்கிம் | ஒவ்வொரு மாநிலத்திலும் 7% |
6 | ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மணிப்பூர் | ஒவ்வொரு மாநிலத்திலும் 6% |
7 | சண்டிகர் மற்றும் பீகார் | ஒவ்வொரு மாநிலத்திலும் 5% |
மக்களின் பருமன் விகிதமும் நாடு முழுவதும் அதிகரித்துள்தாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் பெண்களில் உடல் பருமன் விகிதம் 21 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்களில் 19 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் கேரளா, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், ஆந்திரப்பிரதேசம், கோவா, சிக்கிம், மணிப்பூர், டெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் மூன்றில் ஒரு பெண் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.